இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு அங்குள்ளவர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் ஹெஸ்புல்லாஹ் தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹெஸ்புல்லாஹ் அமைப்பினர் நாளாந்தம் முன்னெடுத்துவரும் வான்வழித் தாக்குதல்களால் இஸ்ரேலின் வட பகுதியிலிருந்த சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், அங்குப் பணியாற்றிவரும் இலங்கையர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய விடயங்களைத் தவிர்த்து அநாவசியமாகத் தங்களது பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டாமென இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
(Visited 47 times, 1 visits today)