பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தால் கைவிடப்பட்ட ஸ்பெயின் சைக்கிள் ஓட்ட போட்டி

மாட்ரிட்டில் நடந்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Vuelta a Espana சைக்கிள் ஓட்டப் பந்தயத்தின் இறுதி போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இதனால் டேனிஷ் வீரர் ஜோனாஸ் விங்கேகார்ட் ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஸ்பானிஷ் தலைநகரில் உள்ள பந்தயப் பாதையின் சில பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததனால் போட்டி கைவிடப்பட்டது.
மாட்ரிட்டின் வீதிகளில் 100,000 பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் திரண்டனர் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)