ஸ்பெயினில் அதி வெப்பமான காலநிலை ஏப்ரலில் பதிவு!
ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம் மிகவும் வரண்ட வெப்பமான வானிலை பதிவாகியதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 1961 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதமே அதிகளவிலான வறண்ட காலநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் AEMET எனப்படும் மாநில வானிலை ஆய்வு நிறுவனம், வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை, 14.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
அதேநேரம் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 4.7 செல்சியஸ் அதிகரித்துள்ளதாக AEMET தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையில் ஐந்தில் ஒரு பங்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்கள் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டை அதிகாரப்பூர்வமாக நீண்ட கால வறட்சிக்குள் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.