தென் கொரிய ஜனாதிபதியை 6 நாட்களுக்கு கைது செய்ய நடவடிக்கை
தென் கொரியாவில் தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜனாதிபதி யூன் சுக் இயோலை எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் கைது செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர்.
அதைத் தடுக்க முயலும் எவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வர் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதற்கிடையே, அரசியல் விசாரணைக்கு ஆளாகியுள்ள யூனின் மூத்த அதிகாரிகள் சிலர் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
தற்காலிக ஜனாதிபதி சோய் சங் மோக் அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகளை நியமித்துள்ளதைக் கண்டித்து அவர்கள் பதவி விலகினர்.
அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3 இடங்களை நிரப்ப வேண்டும் என்பது எதிர்க்கட்சியினரின் கோரிக்கை.
ஆனால், திரு. சோய் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலாகச் செயல்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் கூறியது.
(Visited 62 times, 1 visits today)





