தென் கொரிய நடிகர் பார்க் மின்-ஜே காலமானார்
தென் கொரிய நடிகர் பார்க் மின்-ஜே திடீர் மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 32.
நவம்பர் 29ஆம் திகதி சீனாவுக்குச் செல்லும் விமானத்தில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
‘லிட்டில் வுமன்’, ‘கால் இட் லவ்’, ‘தி கொரியா-கிதான் வார்’, ‘ஸ்னாப் அண்ட் ஸ்பார்க்’ மற்றும் ‘ட்ரூ டு லவ்’ உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க கொரிய நாடகங்களில் நடித்துள்ளார்.
“நடிப்பை விரும்பி எப்போதும் சிறந்ததைக் கொடுக்கும் ஒரு அழகான நடிகர், பார்க் மின்-ஜே சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்” என்று மின்-ஜேயின் ஏஜென்சி பிக் டைட்டில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சடலத்தின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்படும் இடம் தற்போது உறுதிப்படுத்தப்படவில்லை.
(Visited 2 times, 1 visits today)