விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி: மண்கவ்வியது மே.தீவுகள்!

மேற்கிந்திய West Indies தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 83 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், ஹோல்டர் – சைபர்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை ஈடுபட்டனர்.

இதனால் அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்களைப் பெற்றது.

இறுதியில் மேற்கிந்திய தீவகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 177 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 16.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!