உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரின் கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது.
பர்மிங்காமில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 195 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் சர்ஜீல் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பந்துவீச்சில் பர்னெல் மற்றும் வில்ஜோன் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
196 ஓட்ட இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்கள் முடிவில் இலக்கை அடைந்து முதல் முறையாக உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடரின் கோப்பையை வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகப்படியாக அணியின் தலைவர் வில்லியர்ஸ் 120 ஓட்டங்களை பெற்றுள்ளார்.