உலகம் செய்தி

காசாவில் அமைதியற்ற கிறிஸ்துமஸ் – தாக்குதல்களிடையே பிரார்த்தனைகள்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் சத்தங்களுக்கிடையே, காசாவின் கிறிஸ்தவ சமூகத்தினர் இந்த ஆண்டு அமைதியற்ற சூழலில் கிறிஸ்துமஸை அனுசரித்ததாக கூறப்படுகிறது.

காசாவில் உள்ள பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டதுடன், சில இடங்களில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக அல் ஜஸீராவின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பெரும் கொண்டாட்டங்களுக்கு பதிலாக, தேவாலயங்களுக்குள் சிறிய அளவிலான பிரார்த்தனைகள் மட்டுமே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈரானின் குத்ஸ் படை உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் காசாவில் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை  70,942 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1,71,195 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!