விரைவில் புலமைப்ப பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்
 
																																		புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீடு நவம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்தார்.
தென் மாகாணத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்காக 42 நிலையங்களில் 435 மதிப்பீட்டுப் பலகைகள் இயங்கி வருவதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்தார்.
விடைத்தாள்களை சரிபார்க்கும் போது பதிவாகும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்துவதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
