இலங்கை

இலங்கையில் வெளியான பாடல் : தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாராட்டு

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பணியாற்றும் பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

இவர் யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்றவர ஆவர்.

இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படத்தில் இடம்பெறும் இந்த பாடலை பிரசன்ன குருக்கள் பாடியுள்ளார்.

திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை சாந்தகுமார் எழுதியுள்ளார்.

குறித்த பாடல் TRM Pictures youtube தளத்தில் அண்மையில் வெளியாகிய நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்து பலரும் பாடகரான, பிரசன்ன குருக்களின் குரலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!