வாழும் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன் – சீனாவில் பரபரப்பு ஏற்படுத்திய நபர்

சீனாவில் ஒருவர் உயிருடன் உள்ள தாய்க்கு நீண்ட ஆயுள் வேண்டி சவப்பெட்டி வாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
70 வயதைக் கடந்த தாய்க்காக அவர் நடத்திய இந்த சடங்கு, பாரம்பரிய நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிகழ்வில், அவருடைய தாய் ஒரு விசிறியைப் பிடித்தபடி குதூகலமாக சவப்பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் காட்சியைத் தரும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்த சடங்கிற்கு மொத்தம் 20,000 யுவான் ( செலவிடப்பட்டுள்ளது.
சடங்கு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, அந்த நபரை 16 பேர் சேர்ந்து கடையிலிருந்து வீட்டிற்கு சவப்பெட்டியுடன் தூக்கிச் சென்றனர். இசை முழக்கத்துடன் ஊர்வலமாக நடந்த இந்த நிகழ்வை, “மறைந்துவரும் ஒரு கிராமப்புற சடங்கின் பிரதிபலிப்பு” என பலர் விவரிக்கின்றனர்.
சீன மொழியில் “சவப்பெட்டி” மற்றும் “அதிகாரபூர்வ சொத்து” என்ற சொற்கள் ஒத்த ஒலியைக் கொண்டுள்ளன. இதனால், சிலர் இது ஒரு செல்வாக்கு மற்றும் நலத்திற்கான குறியீடாகவும் பார்க்கின்றனர்.
மேலும், சீன பாரம்பரிய நம்பிக்கையின் படி, ஒருவரைப் போன்றவைகளை அனுபவிக்கச் செய்தல், குறிப்பாக சவப்பெட்டிக்குள் உட்காரவைத்தல், அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இச் சடங்கு நடக்கிறது.
இணையவாசிகள் பலர் இந்த செயலை பாரம்பரியத்தைத் தவிர்க்காத ஒரு அன்பான முயற்சி என பாராட்டியுள்ளார்கள். ஒருசிலர் இது ‘தற்காலிகமாக மரணத்தை எதிர்கொண்டு, வாழ்வின் மதிப்பை உணர வைக்கும் சிந்தனையுடனான செயல்’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், சீனாவின் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் நவீன சமூகத்திலுள்ள அதன் தாக்கங்களை வெளிப்படுத்தும் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.