இலங்கையில் தாயை அடித்துக் கொலை செய்த மகன்

வாழச்சேனை பொலிஸ் பிரிவின் நவலடி பகுதியில் மகன் தனது தாயை துடைப்பத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தக் குற்றம் நேற்று (06) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 72 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)