இலங்கையில் நாளைய தினம் சில பாடசாலைகள் மூடல்
இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கபப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்ட இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர்த்து , ஏனைய பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் காரணமாக நேற்றும் இன்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(Visited 59 times, 1 visits today)





