சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சோமாலிய ஜனாதிபதி கண்டனம்
இரண்டு நாட்களுக்கு முன்பு சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியது.
இந்நிலையில், பிரிந்து சென்ற சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் அங்கீகரிப்பது உலகம் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று சோமாலிய(Somali) ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது(Hassan Sheikh Mohamud) அவசர நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சோமாலிலாந்தை முதன்முதலில் அங்கீகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) அறிவிப்பு, சோமாலி குடியரசின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புக்கு சமம்” என்று முகமது குறிப்பிட்டுள்ளார்.
1991ல் சோமாலியாவிலிருந்து சுதந்திரம் அறிவித்த சோமாலிலாந்து, பல தசாப்தங்களாக சர்வதேச அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி





