ஐரோப்பா

இராணுவத்தை விட்டு வெளியேறும் வீரர்கள் – கடும் நெருக்கடியில் உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதால் மனிதவள பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, பலஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சோர்வுற்ற நிலையில் போர் மற்றும் முன்வரிசை நிலைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

சில வீரர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு சென்று திரும்பி வரவே இல்லை என கூறப்படுகின்றது.

போரின் பேரதிர்ச்சிகளால் வேட்டையாடப்பட்டு, வெற்றிக்கான வாய்ப்பு இன்றி இருண்டுள்ளதால் வீரர்கள் மனசோர்வடைந்துள்ளனர். படைகளில் எஞ்சி இருக்கும் வீரர்கள் கமாண்டர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது கட்டளைகளை ஏற்க மறுக்கிறார்கள்.

இந்த பிரச்னை மிகவும் முக்கியமானதாகும் என்று இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்