புனேவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மென்பொருள் பொறியாளர் கைது
பாகிஸ்தானின் அல்-கொய்தா(Al-Qaeda) போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி, மகாராஷ்டிரா(Maharashtra) பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) புனேவில்(Pune) ஒரு மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளது.
கடந்த மாதம் முதல் புனே பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கண்காணிப்பில் இருந்த 33 வயதான ஜுபைர் ஹங்கர்கேகர்(Zubair Hunkarkekar) இன்று கோந்த்வா(Gondwa) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஹங்கர்கேகரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்-கொய்தா இலக்கியங்கள் மற்றும் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அல்-கொய்தா செயல்பாட்டாளர்களுடன் அல்லது பிற தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தாரா, அவர் வைத்திருந்த பொருட்களை கொண்டு என்ன செய்ய விரும்பினார் என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பயங்கரவாத எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது.





