பிரான்சை சூறையாடிச் சென்ற பனிப்புயல் – மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
பிரான்சை சூறையாடிச் சென்ற பனிப் புயலினால், மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் 270,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அவற்றில் 85% சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக மின் வழங்குனர்கள் அறிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் 45,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்னும் 33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை ஏற்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மின் இணைப்பை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Normandy மாவட்டத்தில் 15,500 வீடுகளுக்கும், Pays de la Loire மாவட்டத்தில் 12,000 வீடுகளுக்கும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





