பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து மற்றும் கல்வி பாதிப்பு
கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வடக்கு ஸ்கொட்லாந்தில் கடும் பனிப்பொழிவுக்கான ‘ஆம்பர்’ (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அபெர்டீன் (Aberdeen) மற்றும் ஷெட்லாந்து (Shetland) பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, வீதிகள் அபாயகரமாக இருப்பதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடும் குளிர் காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.





