அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன், கணினிகளுக்கு இனி தேவையே இருக்காது

சுமார் 30 ஆண்டுகளாக உலக மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அம்சமாக ஸ்மார்ட்ஃபோன்கள் மாறிவிட்டன.

இந்நிலையில் தொழில்நுட்ப உலகில் அடுத்த திருப்பத்தை தர தொழிலதிபர் சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டுள்ளார்.

ஏஐ தொடர்பான அனைத்து வித சேவைகளையும் வழங்கும் ஒரு சாதனத்தை ஆல்ட்மேன் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சாமானிய மனிதர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பல்வேறு வசதிகளுக்கு இச்சாதனம் தீர்வு தரும் எனக்கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐஃபோன், ஐபேடு, ஐமேக் போன்றவற்றை வடிவமைத்ததின் சூத்திரதாரியான ஜானி இவ் (jony ive) புதிய சாதனத்தை உருவாக்குவதில் சாம் ஆல்ட்மேனுக்கு உதவிவருகிறார்.

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாம் ஆல்ட்மேன், தங்கள் முயற்சி வெற்றிபெற்றால் ஆப்பிள் ஐஃபோனுக்கு பிறகு தொழில்நுட்ப சாதன உலகில் புரட்சி படைக்கும் பொருளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் ஸ்மார்ட்ஃபோன்கள், கணினிகளுக்கு தேவையே இருக்காது என்ற நிலை உருவாகும் என்றும் ஊகங்கள் உள்ளன. சாம் ஆல்ட்மேன் நடத்தும் ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய சாட் ஜிபிடி உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!