செய்தி விளையாட்டு

SLvsSA – முதல் நாள் முடிவில் 269 ஓட்டங்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன டோனி – டி – சோர்சி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஸ்டப்ஸ் 4 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன எய்டன் மார்க்ரம் 20 ரன்களிலும் வீழ்ந்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ரியான் ரிக்கல்டன் – பவுமா இணை சிறப்பாக விளையாடி அணியை தலை நிமிர செய்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

அதன் பின்பும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பவுமா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த பெடிங்காம் நிலைக்கவில்லை. 6 ரன்களில் நடையை கட்டினார்.

இதனையடுத்து ரிக்கல்டனுடன், கைல் வெர்ரைன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். அபாரமாக விளையாடி சதமடித்த ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்கோ ஜான்சன் 4 ரன்களில் ஆட்டமிழக்க அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் குவித்துள்ளது. கைல் வெர்ரைன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி