செய்தி விளையாட்டு

SLvsENG – ஜோ ரூட் சதம் , 282 ஓட்டங்கள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

தற்போது விளையாடி கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!