SLvsBAN – முதல் நாள் முடிவில் 292 ஓட்டங்கள் குவித்த வங்கதேசம்

வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது.
முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.
இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாத்மான் இஸ்லாம்- அனமுல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அனமுல் ஹக் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்னிலும் மோமினுல் ஹக் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ- முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.