அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: விளக்கம் கோரும் எதிர்க்கட்சி
அடுத்த மாத வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிமொழி தொடர்பில் சமகி ஜன பலவேகய சந்தேகம் வெளியிட்டுள்ளது.
“ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் மத்தியிலும் பல குழப்பங்கள் உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி எவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பார் என்பது எவருக்கும் ஆச்சரியமாக உள்ளது” என சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்கப் போகிறார், எவ்வளவு தொகையிலிருந்து அதிகரிக்கப் போகிறார் என்பதை ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)