தென் அமெரிக்கா

ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்.. ரூ.80 லட்சம் செலவில் பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ (37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற மணந்தார். இதற்கு முன்னதாக லுவானா கசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார்.ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் கூறினார்.

6 மனைவிகளுடன் ஒன்றாக படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று அவருக்கு மிகப்பெரிய கவலை. படுக்கை சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை.இதனால் ஆர்தர் ஓ உர்சோ சமீபத்தில் ரூ. 81 லட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.இந்த பிரமாண்டமான படுக்கையை உருவாக்க 12 தொழிலாளர்கள் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டனர்.

அவரது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இதுகுறித்து ஆர்தர் என் வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய படுக்கை கட்டப்பட்டுள்ளது. ஆர்தர் கின்னஸ் சாதனையில் பெறுவார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றும் அவரது முதல் மனைவி லுவானா 2021 இல் திருமணம் செய்து கொள்ணடார். கத்தோலிக்க திருச்சபையில் மற்ற பெண்களுடன் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருப்பினும், நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்பதால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. ஆர்தருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் கடந்த ஆண்டு மூவரை விவாகரத்து செய்து விட்டார்.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த