பிரிட்டன் புதிய பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையின் ரோயல் பால்கனியில் மன்னர் சார்லஸ் இதனை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொதுத் தேர்தலின் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற முடிந்தது.
முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்து தனது ராஜினாமா கடிதத்தை சார்லஸ் மன்னரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் புதிய பிரதமரை அறிவித்ததாக கூறப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)