சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது!

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது விநியோகத்தை நேற்று முதல் (30.08) ஆரம்பித்துள்ளது.
அதன்படி பெட்ரோல், டீசல் ஆகியவற்றை 10 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பின்னர் மே மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
(Visited 25 times, 1 visits today)