இலங்கை செய்தி

சிங்கள மக்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

தெற்கில் வாழும் தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கோரியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம்.

அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் முஸ்லீம் மக்களும் மதங்களை தாண்டி தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும்.

அதேபோன்று மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!