சிங்கப்பூரர் சிறுவனின் சாதனை – சதுரங்கப் போட்டியில் Grandmasterக்கு அதிர்ச்சி

சிங்கப்பூரைச் சேர்ந்த அஷ்வத் கௌஷிக் என்ற சிறுவன் சதுரங்கப் போட்டியில் grandmasterஐ தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
8 வயதாகும் அவர் இந்தியாவில் பிறந்து பின்னர் அவரது குடும்பத்துடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
சதுரங்கப் போட்டியில் grandmaster எனும் உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற ஒருவரை வீழ்த்திய மிக இளமையானவர் எனும் பெருமையை அஷ்வத் பெற்றுள்ளார்.
அவர் தோற்கடித்த யசெக் ஸ்தோபாவுக்கு (Jacek Stopa) 37 வயதாகின்றது.
முதல் முறையாக grandmasterஐ தோற்கடித்ததில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று அஷ்வத் தெரிவித்தார்.
சதுரங்கப் போட்டி இம்மாதம் சுவிட்ஸர்லந்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் லியோனிட் இவனோவிச் (Leonid Ivanovic) என்பவர் அந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
(Visited 18 times, 1 visits today)