மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள சிங்கப்பூர் : இலங்கைக்கு கிடைத்த இடம்!
சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டெண்ணில் இலங்கை 95 வது இடத்தில் உள்ளது, அதேசமயம் குடிமக்கள் உலகில் 44 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறுவார்கள்.
இலங்கையுடன் ஈரான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் சுட்டெண்ணில் 95வது இடத்தைப் பெற்றுள்ளன.
இலங்கை கடவுச்சீட்டு 2023 இல் 100 வது இடத்திலும் 2022 இல் 102 வது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.