இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரிக்கான வேலை வாய்ப்பு : இன்று மற்றும் நாளை நேர்முகத்தேர்வு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணைப் பொலிஸில் இலங்கையர்களுக்கான 200 வெற்றிடங்களை அறிவித்துள்ளது.
இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (16) மற்றும் நாளை (17) நாவலில் உள்ள SLFEA அலுவலகத்தில் நடைபெறும் என SLFEA யினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://forms.gle/8DzuH5LUooxg4czE6 இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, நேர்காணலுக்காக அவர்களின் பாஸ்போர்ட்டுடன் கல்வி பொது தரா தர உயர்தர பரீட்சை சான்றிதழ் அல்லது IELTS சான்றிதழைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன ஹாட்லைன் 011-2800407 மூலம் மேற்கொள்ளலாம்.






