சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி வேண்டும்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மதியராயன் சிந்துஜா அவருடைய இறப்பு தொடர்பான விசாரணைகள் ஆட்களை மாற்றம் செய்கின்ற விசாரணையாக இருக்காமல் ஒருநீதியான விசாரணையூடாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (07.08.2024) நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் தேசத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கும் போது குறிப்பிட்டார்.
அதை விட 9 வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வரவுள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பையும் நாங்கள் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
உறுதிப்படுத்த தவறும் பட்டத்தில் அவர்கள் வருகை நிச்சயமற்றதாக மாறிவிடும்.
சிந்துஜா தங்கைக்கு ஞாயமான நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது பிரதான கோரிக்கை என்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் மீனவர்கள் தொடர்ச்சியாக இந்திய ரோலர் வருகை காரணமாக பல துன்பத்துக்குள்ளாகும் நிலையில் இப்பொழுதும் நூற்றுக்கணக்கான ரோளர்களின் வருகை இடம்பெறுவதாக பேசப்பட்டு வருகின்றது.
இங்கு கைது செய்யப்படுகின்ற மீனவர்களை விடுதலை செய்வதற்கும் இது அநியாயமான கைதுகள் என்று சொல்லும் சில அரசியல் வாதிகள் அந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அரசு ஞாயமான தீர்வினை வழங்கவேண்டும்.
மீனவர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமானால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தினால் எங்கள் பிரதேசத்தில் அவர்கள் நுழைய மாட்டார்கள் என்பது நம்பிக்கை.
இந்தியாவை அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் அநீதிகளை தட்டிக்கேட்கும் நாடாக நம்பியுள்ளோம். அந்த நம்பிக்கையை இந்த மீனவர்கள் விடயத்தில் காட்டி பலப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தில் படுகொலை சம்பவம் அதிகரித்து வருகின்றது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நடக்கும் அநீதிகளை பொலிசாரும் புலனாய்வு பிரிவும் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான்; மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.