டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – குடியேறியோர் முகாமுக்கு வெளியே குவிந்த மக்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியோர் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புளோரிடாவில் குடியேறியோர் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முகாமில் உள்ள குடியேறியோர் தரமற்ற உணவு, குடிநீர் பற்றாக்குறை, குறைந்த உணவு இடைவெளி உள்ளிட்ட மோசமான சூழ்நிலையில் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமானம் கடந்து, அங்கு நடந்துவரும் செயல்கள் மனித உரிமை மீறலாகும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலைகளும் மலை பாம்புகளும் தவழும் சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள அந்த முகாமை மேலும் விரிவாக்கும் திட்டத்தை ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்துள்ளார். ஆனால் அந்த திட்டத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், குடியேறியோருக்கு மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனும் கோஷத்துடன், போராட்டங்கள் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.