ஷுப்மன் கில் மருத்துவமனையில் – அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு
இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், கழுத்துப் பிடிப்பு (Neck Spasm) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று அவர் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
சௌரவ் குமார் வீசிய பந்தில் பவுண்டரி அடித்த பிறகு, ஷுப்மன் கில்லுக்குத் திடீரெனக் கழுத்து வலி ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர், பரிசோதனைக்காக இரவு முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
“ஷுப்மன் கில்லுக்குக் கழுத்துப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர் தங்களது மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படுகிறார் எனவும், அவர் போட்டியில் கலந்துகொள்வது அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்” என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





