உலகம் செய்தி

அமெரிக்காவில் மீளப் பெறப்படும் இறால் பக்கற்றுக்கள் – அவசர அறிவிப்பு!

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள இறால் பக்கற்றுக்கள்  மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

83,800 உறைந்த இறால்  பக்கற்றுக்கள்   அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வாட்டர்ஃபிரண்ட் (Waterfront) மற்றும் பிஸ்ட்ரோ பிராண்ட் (Bistro brand) என்ற பெயர்களில்  விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புடன் தொடர்புடைய எந்த நோய்களும் இன்றுவரை பதிவாகவில்லை என்பதை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட இறாலை வாங்கிய நுகர்வோர் அதை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மீள செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உணவுப் பொருளில் கதிரியக்க ஐசோடோப்பு சீசியம்-137 அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீசியம்-137 என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ரேடியோஐசோடோப்பு (radioisotope) ஆகும்.  இது  புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!