இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் வைட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக கல்சியம் , மாத்திரைகள் வரவில்லை என்கிறார்கள்.
இதனால், வைட்டமின்கள், கல்சியம், மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளது என தாய்மார்கள் கூறுகின்றனர்.
இதுதவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)