கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிப் பிரயோகம் – குழந்தை உட்பட மூவர் காயம்

ராகமை – வல்பொல பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் பெண் உள்ளிட்ட மூவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)