கொழும்பில் துப்பாக்கிச் சூடு – பிரபல கோடீஸ்வர வர்த்தகர் பலி – பாடகி உட்பட 5 பேர் காயம்
அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் பிரபல பாடகி கே. சுஜீவா இதில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்த கே.சுஜீவாவும், மற்றுமொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






