பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தின் தொழிலாளர் குடியிருப்பு மீது துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் தொழிலாளர் குடியிருப்பு மீதான தாக்குதலில் இரண்டு ஆண்கள் இறந்தது குறித்து பிரேசிலிய போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாவ் பாலோவிலிருந்து வடகிழக்கே 90 மைல் (145 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ட்ரெம்பே நகரில் உள்ள ஒரு குடியேற்றத்தில் இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எம்எஸ்டி எனப்படும் பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதில் க்ளீசன் பார்போசா டி கார்வால்ஹோ, 28, மற்றும் வால்டிர் டோ நாசிமென்டோ, 52, ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது கொலை, கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகைள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.