றிஷாடின் ஆதரவாளர் மீது துப்பாக்கி சூடு :குற்றத்தை ஒப்புக்கொண்டபடை வீரர்களுக்கு 6 மாத சிறை
2015 ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் வாக்களிக்க சென்று கோண்டிருந்த பஸ் வண்டி மீது தந்திரி மலையில் துப்பாக்கி பிரயோகம் செய்ததை ஒப்புக் கொண்ட ஊர்க்காவல் படை வீரர்கள் இருவருக்கு அனுராதபுரம் மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி 6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் நண்டனை வழங்கியுள்ளார்.
விஜித குமாரதுங்க நலிந்த நம்மிக ஆகிய இந்த இரண்டு ஊர் காவல் படை வீரர்களும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் இவ்வழக்கை சமரசத்தில் முடிக்குமாறு தமது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்
அத்துடன் இருவருமாக 28490 ரூபா நட்டயீட்டை செலுத்துமாறும் தனித் தனியாக 1500 ரூபாய் வீதம் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இவர்களுக்கு உத்தரவிட்டார்.





