ஜெர்மனியில் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெர்மனியில் அண்ணளவாக 1.3 மில்லியன் மக்கள் சூதாட்டத்துக்கு அடிமையானவர்களாக உள்ளார்கள் என புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது குலுக்ஸ்பீட் என்று சொல்லப்படுகின்ற லொத்தர் விளையாட்டுக்கள் மற்றும் ஔடோமாட் என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட இயந்திரங்களில் விளையாடுகின்றவர்கள் மற்றும் ஸ்போட் வெட் என்ற விளையாட்டு போட்டிகளில் லொத்தர்களை பாவிப்பவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது அதை விட 3.3 மில்லியன் பேர் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஜெர்மன் சனத்தொகையில் 55 சதவீதமானவர்கள் இவ்வாறு சூதாட்டத்தில் பங்குபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஜெர்மன் சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் இவ்வாறு சூதாட்டங்களில் விளையாடியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த க்ருல்ஸ்பில் என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட விளையாட்டால் அரசாங்கமானது 4.8 மில்லியன் யூரோக்கள் இலாபம் கிடைத்துள்ளது.