Instagram தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
Instagram நிறுவனத்தின் முக்கிய ஆலோசகர் லொட்டே ரூபேக் (Lotte Rubæk) பதவி விலகியிருக்கிறார்.
Instagram தளத்தில் இடம்பெறும் தீங்கான பதிவுகளை அதை நிர்வகிக்கும் Meta நிறுவனம் பொருட்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை நிறுவனம் கேட்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தற்கொலை, சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வது ஆகியவற்றைத் தடுக்கும் ஆலோசனைகளை அவர் நிறுவனத்துக்கு அளித்து வந்தார்.
நிறுவனம் உயிரைவிட லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்குவதாக ரூபேக் குறிப்பிட்டார்.
அவர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் Meta நிறுவனத்தின் உலக நிபுணர் குழுவில் இருக்கிறார்.
சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வதை ஊக்குவிக்கும் படங்களைத் தளத்திலிருந்து அகற்றத் தவறியதால் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“சிறுவர்கள், இளையர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு எங்களுடைய குரல் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இனி இல்லை,” என்று ரூபேக் தம்முடைய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தற்கொலை, சுயமாகத் தீங்கு விளைவித்துக் கொள்வது போன்றவற்றை நிறுவனம் கடுமையாகக் கருதும் என்று Meta பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பல ஆண்டுகளாய் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று நல்ல மாற்றங்களைக் கொண்டு வர நிறுவனம் செயல்பட்டதாக அவர் சொன்னார்.