சீனாவில் 17 வயது பெண்ணுக்கு 50 வயதான நபர் செய்த அதிர்ச்சி செயல்

சீனாவில் 17 வயது பெண்ணுக்கு 50 வயதான நபர் வாடகைத் தாயாகப் பயன்படுத்தியது இணையவாசிகளிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு அவர் சுமார் 124,000 டொலர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. திருமணமாகாத 50 வயது நபர் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற குவாங்சோவ் பகுதியில் உள்ள முகவர் நிறுவனத்தை நாடினார்.
நிறுவனத்திற்கு அவர் சுமார் 124,000 டொலர் கொடுத்ததாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் அந்த இளம்பெண்ணைத் தமது மனைவி என்று பொய் சொல்லி குழந்தைகளின் பிறப்புச்சான்றிதழ்களை அவர் பெற்றதாகவும் கூறப்பட்டது.
சம்பவம் குறித்து குவாங்சோவ் சுகாதார ஆணையம் விசாரித்து வருகிறது. சீனச் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமது மகள் வயதுப் பெண்ணிற்கு இந்த நிலை ஏற்பட்டதை எண்ணிப் பொறுக்க முடியாத ஒரு மாது தீவிர விசாரணை தேவை என்றார்.
மற்றொருவர், வாடகைத்தாய் ஏற்பாட்டை ஆதரிக்கும் மருத்துவ அமைப்புகளைக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்றார்.