இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி – இராஜினாமா செய்யுமாறு டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் இராஜினாமா செய்துகொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்குள் ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 8 மாத ஊதியம் வழங்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அரசு ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம் சுமார் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளது.

“அரசு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வரி செலுத்துவோர் ஊதியம் அளித்து வருகிறார்கள். ஜனாதிபதி டிரம்பின் அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இராஜினாமா செய்து கொண்டு வேறு பணியை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அரசுப் பணியை தொடர விரும்பாதவர்கள் “இராஜிநாமா செய்கிறேன்” என்று இந்த மின்னஞ்சலில் பதிலளித்தால் போதுமானது. செப்டம்பர் 30ஆம் திகதி வரை அவர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும். 6 ஆம் திகதிக்குள் பதிலளிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

நீங்கள் உங்கள் தற்போதைய பணியை தொடர விரும்பினால், புதிய அரசின் ஒரு பகுதியாக இணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம். ஆனால், உங்களின் தற்போதைய பதவிக்கு முழு உத்தரவாதம் அளிக்க முடியாது. பதவி மாற்றப்பட்டாலும் கண்ணியத்துடன் நடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள், தூதரகம், பாதுகாப்பு, தபால் சேவை ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!