இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்தே பகுதியில் நேற்று தனது மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் மகனைத் தாக்கிய நிலையில் மகனைக் கொன்றதாக தேவலேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் படுவத்தே, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும்.
குடும்ப தகராறு காரணமாக, தடியால் அடித்து இந்தக் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)