மலேசியாவில் அதிர்ச்சி – தாயைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த மகன்

மலேசியாவில் வீடு ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட பெணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஓல்ட் கிலாங் சாலையில் (Old Klang) உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவருடைய மகன் அவரைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
மேலும் தமது செயல் குறித்து அந்தப் பெண்ணின் மகனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது குளிர்சாதன பெட்டியின் அருகிலேயே அந்தப் பெண்ணின் மகன் நின்று கொண்டிருத்தாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை உறுதிசெய்த பொலிஸார் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தது.
(Visited 26 times, 1 visits today)