ஜப்பானில் அதிர்ச்சி – தந்தையின் உடலை 2 ஆண்டுகள் அலமாரியில் வைத்திருந்த மகன்

ஜப்பானில் உயிரிழந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகள் அலமாரியில் வைத்திருந்த மகன் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிச்சடங்குச் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதால் அவர் அம்முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது.
நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் அந்த 56 வயது ஆடவர் தோக்கியோவில் சீன உணவகம் நடத்தி வருகிறார். ஆனால் ஒரு வாரத்திற்கு அவர் உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அவரை விசாரிக்க வந்த பொலிஸ் அதிகாரிகள் அவர் மறைத்துவைத்திருந்த எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தனர்.
அப்பா கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தமது 83ஆவது வயதில் காலமானதாக மகன் தெரிவித்தார்.
அப்பாவுக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியப் பணத்தையும் அவர் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை பொலிஸார் கைதுசெய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.