காஸாவில் அதிர்ச்சி – 6 வாரச் சிசு பட்டினியால் உயிரிழப்பு

காஸாவில் 6 வாரங்கள் வயதான ஆண் சிசு ஒன்று உணவின்மையால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
பால் கொடுக்க பால் மாவு கிடைக்கவில்லை. எங்கும் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் விலை மிகவும் அதிகம் என யூசப் என்கிற அந்த சிசுவின் உறவினர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் பலர், தற்போது காஸாவில் பசியால் உயிரிழப்பது மேலும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர், இதற்கான பாதிப்பில் சிறுவர்களும் அடங்குவர்.
2023ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து காஸாவில் பலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரேலிய ராணுவத்தினால் சுமார் 60,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இந்த போர் தொடங்கியதிலிருந்து, பரிதாபமாக, பசியால் உயிரிழந்தவர்கள் தற்போது அதிகரித்துள்ளதென அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இஸ்ரேல் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் அனுப்புவதற்கு தடைவிதித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் அதன் உணவுப் பற்றாக்குறைக்கு பொறுப்பில்லை என்று தெரிவித்து, ஹமாஸ் அமைப்பினர் அந்த உதவிகளை திருடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.