அமெரிக்காவில் அதிர்ச்சி – பெண்ணின் உடலில் தசையை தின்னும் ஒட்டுண்ணி
அமெரிக்க பெண் ஒருவர், மனிதர்களை மிகவும் அரிதாகவே தாக்கும் “screwworm” எனப்படும் கொடிய ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒட்டுண்ணி பொதுவாக வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளில் காணப்படும் ஒன்று. ஆனால் இப்போது, மெக்ஸிகோக்கு அருகிலுள்ள குவாட்டமாலா நாட்டுக்குப் பயணித்த பிறகு, மேரிலந்து (Maryland) மாநிலத்தில் உள்ள பெண் ஒருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
Screwworm எனப்படும் இந்த ஒட்டுண்ணி, உடலில் உள்ள திறந்த காயங்கள் வழியாக நுழைந்து, உயிரின் தசைகளைத் தினத் தொடங்குகிறது.
இது கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கே உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிக்கக்கூடியது. மனிதர்களில் இது மிக அரிதாகவே காணப்படுகிறது.
தொற்றிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமெனில், உடலில் அதன் நூற்றுக்கணக்கான முட்டைகளை அகற்றி, காயங்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
2023ம் ஆண்டு முதல் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த Screwworm தொற்றுகள் அதிகரித்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட வடமத்திய பகுதிகளில் நுழைவுப் பாதைகள் குறித்து அதிகாரிகள் கடும் கவனத்துடன் இருக்கின்றனர்.





