ஜெர்மனியில் பல லட்ச அகதிகளுக்கு அதிர்ச்சி – நிராகரிக்கப்பட்ட அகதி விண்ணப்பம்
ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான சி டி யு கட்சியுடைய தலைவர் பிரக்டிஸ் மேஸ் அவர்கள் நாட்டில் உள்ள அகதிகள் பற்றி தனது விசனத்தை தெரிவித்து இருக்கின்றார்.
ஜெர்மனி நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பாக மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது நிராகரிக்கப்பட்ட அகதிகள் நாடு கடத்தப்படாமல் இந்த நாட்டிலேயே வைத்தியசாலைக்கு சென்று தங்களது வைத்திய தேவையை பூர்த்தி செய்தார்கள் என்றும் பல ஜெர்மனியர்கள் தங்களது வைத்திய உதவிக்காக வைத்தியசாலைகளில் காத்திருக்க வேண்டிய உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட அகதிகள் பல் வைத்தியர்களிடம் சென்று தமது பல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கின்றார்கள்.
அதாவது ஜெர்மன் பிரஜைகளால் இவ்வகையான வைத்திய சோதனைகளை செய்ய முடியாத நிலை உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.