சீன வீடு புகுந்து பெண்ணின் இரத்தத்தை திருடிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவின் நபர் ஒருவர் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணின் இரத்தத்தை அவருக்குத் தெரியாமல் எடுக்க முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இடம்பெற்ற நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லீ என்ற நபர் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வீட்டில் இரகசியமாக நுழைந்து மயக்க மருந்து தடவப்பட்ட துணியினை பயன்படுத்தி பெண்ணை உணர்விழக்கச் செய்து, அவரின்ன் கையிலிருந்து ரத்தத்தை ஊசிமூலமாக எடுத்தார்.
ஆனால், அவர் செயல்படும் போது, திடீரென்று பெண்ணின் கணவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கணவர், இரத்தம் எடுத்த நபரை அடித்து துரத்தி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த வழக்கின் போது, நபர் தன் செயல்களை நியாயப்படுத்த முயற்சித்தார். அவர், மற்றவர்களின் வீடுகளில் புகுந்து குற்றங்களைச் செய்வது, மனவுளைச்சலை குறைக்க உதவுவதாக வாதாடினார்.
நீதிமன்றம், இந்த விவகாரத்தை அத்துமீறிய குற்றமாகக் கருதி, நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.